Button Home Page button About College button Facilities button Courses button Photo Gallery button Contact Us Home  
Madha Teacher Training Institute Logo college building
முதல் பக்கம்   |  கல்லூரி வசதிகள்
College Facilities
1. நூலகம்
1. மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் நூலகம் செயல்படும்.
2. தினசரி செய்தித்தாள்கள் கல்விச் சம்பந்தமான இதழ்கள் மற்றும் 5000 புத்தகங்களுக்கு மேல் நூலகத்தில் வைக்கப்பட்;டுள்ளது.
3. மாணவர்கள் நூலகத்திலிருந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் நூலகப் பாட வேளையில் எடுத்துப் படிக்கலாம்.
 
2. புத்தகம் சீருடை
1. அனைத்து மாணவர்களுக்கும் சீருடை அளிக்கப்படும். தினசரி மாணவர்கள் சீருடையில் வர வேண்டும்.
2. புத்தகம் மற்றும் பதிவேடுகள் அவர்கள் பாடத்திற்கு உரிய வகையில் தரப்படும்.
 
3. வருகைப்பதிவு
1. மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டில் 220 பணி நாட்களில் 80 க்கு குறைவாக வருகைப்பதிவு இருந்தால் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2. மாணவர்கள் கல்லுரிக்குச் சரியான நேரத்திற்கு வருதல் வேண்டும்.
3. மாணவர்கள் மாதம் ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுவர்.
4. மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் 5 நாட்கள் வரை முதல்வரால் விடுப்பு அனுமதிக்கப்படும்.
5. குறிப்பிட்ட படிவத்தில் மட்டுமே விடுப்பு விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.
 
4. பொது நடத்தை விதிகள்
1. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கல்லூரி வளாகத்திற்குள் எங்குச் சந்தித்தாலும் வணக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்.
2. உடன் படிக்கும் சக மாணவ மாணவிகளைக் கிண்டல் கேலி செய்தல் கூடாது.
3. மாணவர்கள் கல்லூரி தொடங்கும் நேரத்திற்குள் வர வேண்டும். கல்லூரி முடியும் நேரத்திற்குப் பிறகு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்கள்.
News & Events
Announcements
Students Admission
விண்ணப்பபடிவம் பெற கிளிக் செய்யவும்
 
 
© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இணையதள வடிவமைப்பு IndiaDirect
Home Page Contact Us Photo Gallery Course Details Facilities About College